Home கலை உலகம் கோலாலம்பூரில் தென்னிந்திய அனைத்துலக திரைப்பட விருது விழா!

கோலாலம்பூரில் தென்னிந்திய அனைத்துலக திரைப்பட விருது விழா!

609
0
SHARE
Ad

SIIMAகோலாலம்பூர், செப்டம்பர் 8 – தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி திரையுலகத்தைச் சேர்ந்த திரை நட்சத்திரங்கள் பங்குபெறும் மாபெரும் தென்னிந்திய அனைத்துலக திரைப்பட விருது விழா ( South Indian International Movie Awards -SIIMA) எதிர்வரும் செப்டம்பர்  12 மற்றும் 13 -ம் தேதிகளில் “ஸ்டேடியும் மெர்டேக்காவில்” பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் ஐந்து மொழிகளிலும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என பல்வேறு பிரிவுகளில் நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த விழாவில் நவ்தீப், பூஜா, சிவா மற்றும் ஷ்ராதா தாஸ் ஆகிய நான்கு பேரும் அறிவிப்பாளர்களாக செயல்பட்டு நிகழ்ச்சியை மிகவும் கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடத்திச் செல்லவுள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்திய திரைப்படக் குடும்பம் அத்தனையும் ஒரே மேடையில் காணும் இந்த நிகழ்ச்சியை  மலேசிய மக்கள் கண்டு களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இம்முறை இந்த தென்னிந்திய அனைத்துலக திரைப்பட விருது விழா கோலாலம்பூர் நடத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தங்களது பத்திரிகை அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் நட்சத்திரக் கொண்டாட்டத்தில்  கலந்து கொள்ள www.ticketpro.com.my என்ற இணையத்தள முகவரிக்கு சென்று உங்களது அனுமதிச் சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சி குறித்த மேல்விபரங்களுக்கு www.astroulagam.com.my எனும் அகப்பக்கத்திற்குச் செல்லவும்.