Home தொழில் நுட்பம் சேன்டிஸ்க் அறிமுகப்படுத்திய 512ஜிபி நினைவக அட்டைகள்!

சேன்டிஸ்க் அறிமுகப்படுத்திய 512ஜிபி நினைவக அட்டைகள்!

539
0
SHARE
Ad

sandisk_card-624x351கோலாலம்பூர், செப்டம்பர் 15 – தொழில்நுட்ப கருவிகளுக்கான நினைவக அட்டைகள்‘ (Memory Card)-ஐத் தயாரிக்கும் சேன்டிஸ்க்‘ (SanDisk) நிறுவனம், 512ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட நினைவக அட்டைகளைத் தயாரித்துள்ளது. தபால் தலை போன்ற அளவுள்ள இந்த புதிய நினைவக அட்டைகளின் விலை சுமார் 800 அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலாக 512 எம்பி கொண்ட நினைவக அட்டைகளை வெளியிட்ட சேன்டிஸ்க் நிறுவனம், தற்போது இவ்வகை நினைவக அட்டைகளை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள், நினைவக அட்டைகளை 2,000ஜிபி வரை சேமிப்பு திறன் கொண்டதாக உருவாக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

இந்த புதிய நினைவக அட்டைகள் உருவாக்கப்பட முக்கிய காரணம், திரைப்படத் துறையில் அதிகரித்து வரும் ‘4கே ரிசொல்யூசன்‘ (4K Resolution) ஆகும். இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் எடுக்கப்படும் படங்கள் மற்றும் காட்சிகள், எச்டி அளவை விட நான்கு மடங்கு அதிகம். எனினும் அந்த படங்களுக்கான சேமிப்புதிறனும் மிக அதிகம். ஒரு நிமிடத்திற்கு 5ஜிபி வரை சேமிப்பு திறன் தேவைப்படும் என்று கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்த புதிய நினைவக அட்டைகள் குறித்து சேன்டிஸ்க் நிறுவனத்தின் துணைத் தலைவர் தினேஷ் பாகல் கூறுகையில், “4கே அல்ட்ரா எச்டி தொழில்நுட்பம் தான் இவ்வகை நினைவக அட்டைகளைத் தயாரிக்க உந்துகோலாக இருந்தது. இந்த புதிய நினைவக அட்டைகளை எச்டி கேமராக்களுக்கும் பயன்படுத்தலாம். இதன் மூலம் 30 மணிநேர எச்டி திறன்கொண்ட காணொளிகளை பதிவு செய்ய முடியும்” என்று கூறியுள்ளார்.