Home படிக்க வேண்டும் 2 இந்தியாவில் 100 பில்லியன் டாலர்களுக்கு மேலாக முதலீடு செய்யும் சீனா! 

இந்தியாவில் 100 பில்லியன் டாலர்களுக்கு மேலாக முதலீடு செய்யும் சீனா! 

724
0
SHARE
Ad

China_10பெய்ஜிங், செப்டம்பர் 15 – ஆசிய அளவில் முன்னணி நாடுகளாக கருதப்படும் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை தொடர்பான பிரச்சனைகள் நீண்ட காலமாக இருந்து வந்தாலும், வர்த்தக ரீதியா உறவினை பலப்படுத்த இரு நாடுகளும் முயன்று வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் வர்த்தக ரீதியாகவும், வட்டார ரீதியாகவும் நல்லுறவை மேற்கொள்ள விரும்பிய சீனா, இந்தியாவில் 100 பில்லியன் டாலர்களுக்கு மேலாக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு தனிப் பெரும்பான்மையுடன் பொறுப்பேற்ற நிலையில், உலக நாடுகள், பல பில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய தொடர்ந்து முயன்று வருகின்றன. சமீபத்தில் ஜப்பானின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுடன் வர்த்தக ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் பல பில்லியன் டாலர்களுக்கு நிகரான ஒப்பந்தகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

மேலும், இந்தியாவில் அதிவேக இரயில்களை அமைக்கவும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் ஜப்பான் அறிவித்தது. இந்நிலையில் சீனா, அதிவேக இரயில் தயாரிப்பில் ஜப்பானை விட தங்கள் நாடு முன்னோடியாக செயல்பட்டு வருவதாகவும், இந்தியா விரும்பினால் அதற்கான முதலீடுகளையும், தயாரிப்பினையும் தங்கள் நாடு ஏற்கத் தயார் என்றும் அறிவித்தது.

#TamilSchoolmychoice

மேலும், விரைவில் இந்தியப் பயணம் மேற்கொள்ள இருக்கும் அந்நாட்டி பிரதமர் ஜி ஜின்பிங், ஜாப்பானை விட சீனா அதிக அளவில் இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதற்கான திட்டங்களை அறிவிப்பார் என்றும்  கூறியுள்ளது.

இதுகுறித்து இந்தியாவிற்கான சீனத் தூதர் லியூ யூபா கூறுகையில், “இந்தியாவில் சுமார் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய சீனா முடிவு செய்துள்ளது. தொழில்துறை பூங்காக்கள், ரயில்வே துறையை நவீனபடுத்துதல், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், மின் உற்பத்தி விநியோகம், வாகனங்கள், உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் இந்த முதலீடுகள் செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.