Home இந்தியா எனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம்! காஷ்மீர் மக்களுக்கு உதவுங்கள் – மோடி

எனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம்! காஷ்மீர் மக்களுக்கு உதவுங்கள் – மோடி

428
0
SHARE
Ad

Prime Minister of India, Narendra Modi after attending the all party meeting in New Delhi.நியூ டெல்லி, செப்டம்பர் 15 – தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறும் தனது நண்பர்களையும், மக்களையும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

குஜராத் உள்பட நாடு முழுவதும் வரும் 17-ஆம் தேதி, அவரது 64-ஆவது பிறந்த நாளைக் கொண்டாட பாஜகவினர் திட்டமிட்டுள்ள நிலையில், மோடி இவ்வாறு வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து மோடி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

“எனது பிறந்த நாளுக்காக பல்வேறு திட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் நடத்த எனது நண்பர்களும், நல விரும்பிகளும் திட்டமிட்டு வருவதாக பல்வேறு பகுதிகளில் இருந்து நான் கேள்விப்படுகிறேன். எனினும், எனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

#TamilSchoolmychoice

அதற்குப் பதிலாக, உங்களின் நேரத்தையும், பணத்தையும் செலவழித்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் நிவாரணப் பணிகளுக்கு உதவுங்கள். ஜம்மு-காஷ்மீரின் சகோதர, சகோதரிகளுக்கு நாம் தோளோடு தோள் நின்று உதவுவதே இப்போதைய தேவையாகும்.

சீன அதிபர் ஜீ ஜின்பிங் வரும் 17-ஆம் தேதி குஜராத் வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு நாம் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். அன்று எனது பிறந்த நாள் கொண்டாட்டம் எதுவும் நடைபெறாது என்று மோடி தெரிவித்துள்ளார். சீன அதிபரை வரவேற்பதற்காக, மோடி 17-ஆம் தேதி குஜராத் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.