Home அவசியம் படிக்க வேண்டியவை ஆரக்கிள் நிறுவனத்திற்கு புதிய தலைமை: பெரும் ஊதியத்துடன் பதவி விலகினார் லாரி எல்லிசன்!

ஆரக்கிள் நிறுவனத்திற்கு புதிய தலைமை: பெரும் ஊதியத்துடன் பதவி விலகினார் லாரி எல்லிசன்!

459
0
SHARE
Ad

larry-ellison-1008-lgசெப்டம்பர் 25 – சாதாரண மக்களைக் காட்டிலும் மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான அனுபவங்களைப் பெற்றவர்களுக்கு ‘ஆரக்கிள்’ (Oracle) என்னும் வார்த்தை நன்கு அறிமுகமான ஒன்றாக இருக்கும். உலகம் கணினி மயமாகிக் கொண்ருந்த காலத்தில் தரவுகளின் பாதுகாப்பு மிகுந்த கேள்விக் குறியாக இருந்தது. அந்த சமயத்தில் தரவுகளைப் பாதுகாக்க பல வழிமுறைகளைக் கொண்ட மென்பொருட்கள் மற்றும் தரவுத் தளங்களை வெளியிட்டு பெரும் புகழ் பெற்ற நிறுவனம் தான் ஆரக்கிள் .

சமீபத்தில் அந்நிறுவனம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. அது என்னவென்றால் அந்நிறுவனத்தில் மிக நீண்ட காலமாக தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவரும், உலகின் 5-வது பணக்காரர் என்றும் அறியப்படும் லாரி எல்லிசன், தனது தலைமைப் பதவியில் இருந்து விலகுகிறார் என்பதாகும். இனி அவரது பதவியை  மார்க் ஹர்ட் மற்றும் சாஃப்ரா கேட்ஸ் மேற்கொள்வர் என்று ஆரக்கிள் அறிவித்தது. மேலும், எல்லிசனுக்கு நிர்வாக தலைவர் என்ற பொறுப்பும் வழங்கப்பட்டது.

வயது மூப்பு, முதலீட்டாளர்களின் நிர்பந்தம் உள்ளிட்ட காரணங்களுக்காக  எல்லிசன் இந்த முடிவினை எடுக்க நேர்ந்தது என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

#TamilSchoolmychoice

இந்நிலையில்,  எல்லிசன் இந்த வருடத்தில் கடந்த 9-பது மாதங்களாக செய்த பணிக்காக 67.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஊதியத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது அனைவருக்கும் மலைப்பை ஏற்படுத்தினாலும், இது கடந்த வருடத்தை விட 15.5 சதவீதம் குறைவான ஒன்றாகும்.

இதே போல், மார்க் ஹர்ட் மற்றும் சாஃப்ரா கேட்ஸ் இருவருக்கும் 2014-ம் நிதியாண்டின் ஊதியத் தொகையாக தலா 37.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகையும் கடந்த ஆண்டைவிட குறைவாகும், இதற்கு முக்கியக் காரணம், இது தொடர்பாக ஆரக்கிள் முதலீட்டாளர்களிடையே எழுந்த விமர்சனங்களே ஆகும். நிறுவனம் பொருளாதார நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது, இம்மூவருக்குமான ஊதியத் தொகை மிக அதிகமாக வழங்கப்பட்டு வருகின்றது என்று கூறப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக முதலீட்டாளர்களில் ஒருவரான மைக்கேல் ப்ரைஸ் ஜோன்ஸ் கூறுகையில், “நிறுவனம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது தலைமையில் உள்ளவர்களுக்கு வழகப்பட்டு வந்த ஊதியத் தொகை குறைக்கப்படுவது வாடிக்கை. எனினும், தலைமையில் உள்ள மூவருக்கும் ஊதியத்தொகை குறைக்கப்பட்டாலும், பங்கு மற்றும் சலுகைகள் உட்பட பிற காரணிகள் இன்னும் குறைக்கப்பட வில்லை” என்று கூறியுள்ளார்.

ஆரக்கிள் நிறுவனத்தில் 25 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும் எல்லிசனின் பதவி விலகலும், புதிய தலைமையும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.2014-ம் ஆண்டில் சிறய அளவிலான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிறுவனம், ஔதிய தலைமையின் கீழ் விரைவில் மீண்டு எழும் என்று நம்பப்படுகின்றது.