Home கலை உலகம் 100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் விஜய் – சிம்புதேவனின் புதிய படம்!

100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் விஜய் – சிம்புதேவனின் புதிய படம்!

707
0
SHARE
Ad

vijay-0227சென்னை, செப்டம்பர் 26 – ‘கத்தி’ படம் தீபாவளிக்கு வெளியாவதைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கும் புதியப் படத்தில் விஜய் நடிக்கிறார். ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஶ்ரீதேவி, சுதீப் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனராம்.

சரித்திரம், நிகழ்காலம் என வேறுபட்ட இரு காலங்களில் நிகழும் இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லையாம். 100 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாராகிறதாம்.

இதற்காக விஜய் 200 நாட்கள் ஒதுக்கி தந்திருக்கிறாராம். படப்பிடிப்புகள் முடிந்து அடுத்தகட்ட பணிகளுக்கு மட்டும் மூன்று மாதங்களுக்கு மேல் ஆகுமாம். கேரளாவில் முதல் படப்பிடிப்பு நடக்கிறது.

#TamilSchoolmychoice

vijay58தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்துக்கு நட்டி நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். முத்துராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தனர்.