Home இந்தியா நன்றி அமெரிக்கா எனக் கூறி தனது பயணத்தை நிறைவு செய்தார் மோடி!

நன்றி அமெரிக்கா எனக் கூறி தனது பயணத்தை நிறைவு செய்தார் மோடி!

645
0
SHARE
Ad

modi1வாஷிங்டன், அக்டோபர் 1 – அமெரிக்க பயணத்தின் நிறைவாக தொழிலதிபர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மோடி, நன்றி அமெரிக்கா என்று கூறி தனது பயணத்தை நிறைவு செய்து கொண்டார்.

ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இந்தியா திரும்புகிறார்.

அமெரிக்காவில் நடந்த தொழிலதிபர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு நேராக ஆண்ட்ரூஸ் விமான நிலையம் வந்து, அமெரிக்காவில் இருந்து புது டெல்லி திரும்புகிறார் நரேந்திர மோடி.

#TamilSchoolmychoice

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய மோடி, எனது இந்த பயணம் வெற்றிகரமாக அமைந்தது. இங்கிருந்து நான் நேராக விமான நிலையம் செல்கிறேன். நன்றி அமெரிக்கா என்று கூறியுள்ளார் மோடி.