பாக்தாத், அக்டோபர் 2 – ஈராக்கை அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், பாக்தாத் இராணுவத் தளத்தை கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இராணுவத் தளத்தை கைப்பற்ற நடந்த சண்டையில் 300 இராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
ஈராக்கில் சன்னி பிரிவை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், பல நகரங்களை ஒன்றிணைத்து இஸ்லாமிய தேசமாக உருவாக்க ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களின் பகுதிகளில் அமெரிக்க இராணுவம் கடந்த மாதம் முதல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனைத் தொடர்ந்து ஈராக் அரசை பழி தீர்க்கும் விதமாக ஈராகின் வடக்கு பகுதிகளில், குறைந்த எண்ணிக்கையில் வாழும் ஷியா பிரிவினரை தீவிரவாதிகள் கொன்று குவித்து வருகின்றனர்.
மேலும் தற்போது, பாக்தாத் அருகே உள்ள ஈராக் இராணுவ தளத்தை தீவிரவாதிகள் கைபற்றியுள்ளதாகவும், அங்கு சண்டையில் ஈடுபட்ட 300 இராணுவ வீரர்களை படுகொலை செய்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.