Home உலகம் செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் முதல் சுற்றுலா பயணி

செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் முதல் சுற்றுலா பயணி

641
0
SHARE
Ad

sevvaay

நியூயார்க், பிப்.25- செவ்வாய் கிரகத்துக்கு, அமெரிக்க செல்வந்தர் ஒருவர், முதன் முறையாக, பயணம் செய்ய உள்ளார்.

அமெரிக்காவின் செல்வந்தர்களில் ஒருவரான, டென்னிஸ் டிடோ, 72. விண்வெளி அறிவியல்  பொறியியலாளரான இவர், “நாசா’ விஞ்ஞானியாக பணியாற்றிய, அனுபவம் உள்ளவர்.

#TamilSchoolmychoice

பூமியில் இருந்து, 360 கி.மீ., உயரத்தில், பூமியை சுற்றி வரும், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு, கடந்த, 2001ல், இவர் சுற்றுலா சென்றார்.

இதற்கிடையே, வரும், 2018ல், செவ்வாய் கிரகத்துக்கு, இவர், 501 நாட்கள், பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதன் மூலம், செவ்வாய் கிரகத்துக்கு செல்லும், முதல் சுற்றுலா பயணி என்ற பெருமை, இவருக்கு கிடைக்கும்.

இரண்டு பேர், பயணம் செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள, “ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்’ விண்கலம், “பால்கன் ஹெவி’ ராக்கெட் மூலம், வரும், 2018ல், ஜனவரியில், பூமியில் இருந்து, செவ்வாய் கிரகத்துக்கு செலுத்தப்பட உள்ளது.

“இந்த பயணத்தில், டிடோ, தொடர்ந்து, ஓராண்டுக்கு மேல், விண்வெளியில் செலவிடுவதால், உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது’ என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.