இஸ்லாமாபாத், பிப்.25- பாகிஸ்தானில், அணு உலைகளை அமைக்க, சீனா, 14 ஆயிரம் கோடி ரூபாய், கடன் வழங்கியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள, பஞ்சாப் மாகாணத்தில், 340 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட, இரண்டு அணு உலைகளை, அந்நாட்டு அரசு அமைத்து வருகிறது.
19 ஆயிரம்கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த அணு உலைகளை அமைக்க, சீனா உதவி வருகிறது.
இதன் கட்டுமான செலவுக்காக, 14 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியை சீனா அளித்துள்ளது.
இந்த அணு உலை பாதுகாப்பு குறித்து, அண்டை நாடுகள் கேள்வி எழுப்பினாலும், கண்டுகொள்ளாமல், கட்டுமான பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.