Home இந்தியா தமிழக தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் காலமானார்

தமிழக தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் காலமானார்

638
0
SHARE
Ad

Pollachi Mahaligamசென்னை, அக்டோபர் 2 – தமிழகத்தின் பிரபல தொழில் அதிபரும், வள்ளலார் இயக்கங்களில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தவருமான பொள்ளாச்சி மகாலிங்கம் வள்ளலார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது காலமானார்.

சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற வள்ளலார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பொள்ளாச்சி மகாலிங்கம் பேசினார்.

அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக அவரது உயிர் பிரிந்தது.

#TamilSchoolmychoice

இவர் சக்தி சுகர்ஸ். சக்தி பைனான்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பல பிரபல தொழில் நிறுவனங்களை நடத்தி வந்தார். 2007-ம் ஆண்டு இவருக்கு பத்மபூஷன் பட்டம் வழங்கப்பட்டது.

மகாலிங்கம் தமிழக சட்டசபையில் 15 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.  மேலும் ஆன்மிகம் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் ஈடுபாடு கொண்டிருந்தார். குமரகுருபரர் மற்றும் நாச்சிமுத்து பாலிடெக் போன்ற கல்வி நிறுவனங்களையும் நடத்தி வந்தார்.

தமிழகத்தின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்ந்தாலும், எப்போதும் எளிமையைக் கடைப்பிடித்து வந்தவர். தமிழில் பக்தி மற்றும் சங்க கால இலக்கியங்களைப் பதிப்பிப்பதில் பல பதிப்பகங்களுக்கு இவர் நன்கொடை வழங்கியுள்ளார்.

பொள்ளாச்சி மகாலிங்கத்தின் கணிசமான நன்கொடைகளினால், பல பக்தி இலக்கியங்கள் நூலாகப் பதிப்பிக்கப்பட்டு, மலிவு விலையில் மக்களுக்கு கிடைப்பதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டது.