Home கலை உலகம் இன்று ஈப்போவில் அஸ்ட்ரோவின் ‘ஒளிரட்டும் தீபாவளி’ கொண்டாட்டம்! பாடகி சின்மயி கலந்து கொள்கின்றார்

இன்று ஈப்போவில் அஸ்ட்ரோவின் ‘ஒளிரட்டும் தீபாவளி’ கொண்டாட்டம்! பாடகி சின்மயி கலந்து கொள்கின்றார்

928
0
SHARE
Ad

Chinmayiஈப்போ, அக்டோபர் 11 – தனது இந்திய அலைவரிசைகளில் பல்வேறு சிறப்பு தீபாவளி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவிருக்கும் அதே வேளையில், தீபாவளி கொண்டாட்டத்தை பொதுமக்களோடும், பயனர்களோடும் இணைந்து நேரடியாகக் கொண்டாடும் விதத்தில் அஸ்ட்ரோ நாடெங்கிலும் பல்வேறு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

இன்று முதல் கட்டமாக ஈப்போவில் உள்ள, மைடின் மேரு ராயா பேரங்காடி வளாகத்தில் காலை 10.00 முதல் அஸ்ட்ரோவின் ‘ஒளிரட்டும் தீபாவளி’ என்ற கொண்டாட்டம் மக்கள் சந்திப்பாக நடைபெறவிருக்கின்றது.

அடுத்த நிகழ்ச்சி எதிர்வரும் அக்டோபர் 18ஆம் தேதி ஜோகூர் பாருவில் உள்ள பாடாங் அங்சானா மால் வளாகத்தில் நடைபெறுகின்றது.

#TamilSchoolmychoice

மேலும் முழுமையான விவரங்களை www.astroulagam.com.my இணையத் தளத்தின் வழி தெரிந்து கொள்ளலாம்.

Astro Ulagam

பாடகி சின்மயி வருகை

‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடலோடு, ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கோர்வையில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தின் வழி பாடகியாக தமிழ்த் திரையுலகில் நுழைந்து தமிழ் இரசிகர்களைத் தனது குரலால் கொள்ளை கொண்ட பாடகி சின்மயி (படம்) இன்று ஈப்போவில் நடைபெறும் அஸ்ட்ரோவின் ‘ஒளிரட்டும்’ தீபாவளி நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிப்பார்.

மேலும் அஸ்ட்ரோ கலைஞர்களும், பல உள்நாட்டுக் கலைஞர்களும் இந்த நிகழ்வில் பங்கு பெற உள்ளனர்.

ஒவ்வொரு தீபாவளியின் போதும், நாட்டின் மூலை முடுக்குகளில் இருக்கும் தனது இரசிகர்களை தனது பல்சுவை கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் சென்றடையும் அதே வேளையில், இரசிகர்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் ஆதரவை நேரடியாகப் பார்க்கவும், பெறவும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளையும் அஸ்ட்ரோ ஏற்பாடு செய்து வருகின்றது.

உள்நாட்டுக் கலைஞர்களோடு, அஸ்ட்ரோ மேற்கொள்ளும் இந்த கலைப்பயணம் பெருமளவில் இரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அவர்கள் கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கில் கூடி, தங்களின் ஆதரவைப் புலப்படுத்தியுள்ளனர்.

NARESH_IYER Singerஉள்நாட்டுக் கலைஞர்களோடு, தமிழகக் கலைஞர்களும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்கள். அந்த வகையில் இன்று ஈப்போ நிகழ்ச்சியில் சின்மயி கலந்து கொள்ளும் வேளையில் எதிர்வரும் அக்டோபர் 18ஆம் தேதி ஜோகூர் பாரு நிகழ்ச்சியில் பாடகர் நரேஷ் ஐயர் (படம்) கலந்து கொள்கின்றார்.

மற்ற சில நகர்களிலும் அஸ்ட்ரோவின் ‘ஒளிரட்டும் தீபாவளி’ கொண்டாட்டங்கள் வலம் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.