Home தொழில் நுட்பம் ஆப்பிளுக்குப் போட்டியாக நெக்சஸ் 9 நாளை வெளியாகலாம்!

ஆப்பிளுக்குப் போட்டியாக நெக்சஸ் 9 நாளை வெளியாகலாம்!

424
0
SHARE
Ad

htc-nexus-9-mockup0கோலாலம்பூர், அக்டோபர் 14 – நெக்சஸ் 9 தட்டைக் கணினியை நாளை வெளியிட கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன. முன்னணி நிறுவனமான ஆப்பிள், தனது அடுத்த தயாரிப்பினை வரும் 16-ம் தேதி வெளியிடலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாகவே கூகுள் தனது தயாரிப்பினை அறிமுகம் செய்கின்றது.

தைவான் நிறுவனமான ‘எச்டிசி’ (HTC)-ன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் இந்த புதிய தட்டைக் கணினி, நெக்சஸ் ரகங்களில் மூன்றாவதாக கருதப்படுகின்றது.

நெக்சஸ் 9 தட்டைக் கணினியின் தயாரிப்பில் முனைப்புடன் செயல்பட்டு வரும் எச்டிசி நிறுவனம், அதன் வடிவமைப்பு மற்றும் வெளிப்புறத் தோற்றத்தில் சிறந்த தரத்தினை கொடுக்க தீர்மானித்துள்ளது.

#TamilSchoolmychoice

செயலியின் செயல்பாடோ அல்லது காணொளிகளின் ஒளிபரப்போ, சிறந்த காட்சிப்படுத்துதல் மட்டும் வாடிக்கையாளர்களைக் உடனடியாகக் கவரும்.

இதனைக் கருத்தில் கொண்டு, நெக்சஸ் 9 தட்டைக் கணினியின் திரை எச்டி 9 காட்சி முறையை விட சிறந்ததாகவும், இதன் பிக்செல் தீர்மானம்  2,560 x 1,440-ம் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

ஆப்பிள் டேப்களின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு நெக்சஸ் 9 ஆனது ‘என்விடியா கே 1’ (Nvidia K1) உணர்த்திகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

nexus-9-material-design-1இதன் மூலம் செயலிகளை இயக்குதல், காணொளிகளைக் காணுதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் சிறந்த செயல்பாட்டினைக் கொடுக்கும் என்று கூறப்படுகின்றது.

மேலும், இந்த தட்டக் கணினியில் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம் என்னவென்றால், முதன் முதலாக ‘அண்டிரொய்டு எல்’ (Android L) இயங்குதளத்தில் வெளிவர இருக்கும் முதல் கருவி இதுவாகும்.

தொழில்நுட்ப பத்திரிக்கைகளின் கணிப்புப் படி, எதிர்வரும் 15-ம் தேதி அறிமுகமாகும் இந்த தட்டைக் கணினி, அடுத்த 3- தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சுமார் 399 அமெரிக்க டாலர்கள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நெக்சஸ் 9, ஆப்பிளின் தயாரிப்பிற்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.