இப்படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் 2ம் பாகம் என பலரும் கூறிய வேளையில் இது முற்றிலும் வேறு கதை என கூறியுள்ளார் இயக்குநர் ராஜேஷ். ஆர்யா, சந்தானம் நடிக்கும் இப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் தமன்னா.
தமன்னாவும் ஆர்யாவும் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தமன்னா தனது ட்விட்டர் தளத்தில், “ராஜேஷ் மற்றும் ஆர்யாவுடன் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.என்னால் இனியும் காத்திருக்க முடியாது எனவும், மகிழ்ச்சியான படப்பிடிப்பை எதிர்நோக்கியிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார் தமன்னா.
Comments