Home உலகம் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் தொடர் அத்துமீறல்: பான் கீ மூன் கடும் கண்டனம்!

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் தொடர் அத்துமீறல்: பான் கீ மூன் கடும் கண்டனம்!

709
0
SHARE
Ad

PAN KI MOONஜெனிவா, அக்டோபர் 14 – பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதியை தொடர்ச்சியாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்து வருவதற்கு ஐ.நா. பொது செயலாளர் பான் கீ மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தீவிரவாதிகளுடனான சண்டையில், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை உருக்குலைத்த இஸ்ரேல் தற்போது அந்நாட்டின் மேற்குக் கரைப் பகுதியை தம் மக்களைக் கொண்டு ஆக்கிரமிப்பு செய்து வருவதாக பாலஸ்தீன பிரதமர் ரமி ஹம்தல்லா குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக ஐ.நா. பொது செயலாளர் பான் கீ மூன் கூறுகையில், “பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேலியர்கள் தொடர்ந்து குடியேறி வருவது கண்டிக்கத்தக்கது.

#TamilSchoolmychoice

மேற்குக் கரைப் பகுதியில் இருந்து விலகி இஸ்ரேலியர்கள் தங்கள் நாட்டிற்குச் செல்ல வேண்டும். பாலஸ்தீனத்தில், இஸ்ரேல் நடத்தும் அத்துமீறல்களை ஐ.நா. கூர்ந்து கவனித்து வருகின்றது” என்று அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சீரமைக்க உலக நாடுகள் முன்வந்துள்ளன.