புதுடெல்லி, ஏப்ரல் 3 – கென்யாவில் கரிஸ்ஸா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா பொதுச்செயலாளர் பான் கி மூன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி “பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மிகவும் கொடூரமானது என சாடியிருக்கிறார். பல்கலைக்கழகத் தாக்குதல் வன்மையாக கண்டித்தக்கது” என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
கென்ய பல்கலைக்கழக தாக்குதலை ஐ.நா.சபையில் பொதுச்செயலாளர் பான் கி மூனும் வன்மையாகக் கண்டித்திருக்கிறார். “தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என பான் கி மூன் வலியுறுத்தியுள்ளதாக ஐநா செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் தெரிவித்தார்.
கென்யாவில் கரிஸ்ஸா பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 147 மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.