Home வணிகம்/தொழில் நுட்பம் பத்திரிக்கைகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது – டத்தோ முனியாண்டி விளக்கம்!

பத்திரிக்கைகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது – டத்தோ முனியாண்டி விளக்கம்!

612
0
SHARE
Ad

muniyaandiகோலாலம்பூர், ஏப்ரல் 3  – ஜிஎஸ்டி குறித்து பத்திரிக்கை விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைய  வேண்டாம். தினசரி நாளிதழ்களான ஹாட் காப்பி என்று  சொல்லப்படுபவைகளுக்கு  6% ஜிஎஸ்டி வரி கிடையாது.

இ–பேப்பர், வார இதழ்கள் உள்ளிட்டவற்றிற்கு மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது என சிலாங்கூர் கூட்டரசு பிரதேச பத்திரிக்கை விற்பனையாளர்கள் சங்கத்தலைவர் டத்தோ டாக்டர் என்.முனியாண்டி விளக்கம் அளித்துள்ளார்.

பத்திரிக்கைகளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக கூறி ஆங்காங்கே சொல்லப்படுகிறது. இது உண்மையாகின் ஒரு வேளை அந்த மாதிரி வரிகள் விதிக்கப்பட்டால் சுங்கத்துறையில் புகார் அளித்து சரியான விளக்கத்தை பெறலாம்.

#TamilSchoolmychoice

தவறான நோக்கத்தோடு மக்களை ஏமாற்றும் வண்ணம் யாரும் நடந்து கொள்ள வேண்டும். வரி இல்லாத நிலையில் வரி போட்டு வாடிக்கையாளர்களுக்கு சுமையை ஏற்படுத்த வேண்டாம் என டத்தோ முனியாண்டி தெரிவித்துள்ளார்.