நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்துவதாக முதலில் பரிந்துரை கொண்டு வரப்பட்டதாகவும், அவ்வாறு செய்தால் எம்.பி.க்களின் மாதாந்திர சம்பளம் இருமடங்கு உயர்வு காணும் என்பதாலேயே எதிர்க்கட்சிக் கூட்டணி எதிர்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார் அன்வார். குறிப்பாக ஜி.எஸ்.டி., குறித்து குறிப்பிட்ட அவர், இந்த வரி விதிப்பால் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு சுமைகள் அதிகரிக்கும் என்றார்.
இச்சமயம் குறுக்கிட்ட பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஷாகிடான் காசிம், எம்.பி.க்களின் தினப்படி உயர்த்தப்படுவதை ஆதரிக்கிறீர்களா? என அன்வாரிடம் கேட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை 222 எம்.பி.க்களின் தினப்படியை, வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்த்தும் அறிவிப்பை பிரதமர் வெளியிட்டார்.
முன்னதாக கடந்த 1992, 1997 ,2001, 2002, 2005 -ம் ஆண்டுகளில் எம்.பி.க்களின் ஊதியங்கள் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.