Home தொழில் நுட்பம் விரைவில் கூகுளின் நெக்சஸ் 8 டேப்லெட்கள்!   

விரைவில் கூகுளின் நெக்சஸ் 8 டேப்லெட்கள்!   

484
0
SHARE
Ad

Nexus8conceptமே 19 – கூகுளின் நெக்சஸ் வகை டேப்லெட்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. அந்தவகையில் கூகுள் நிறுவனம் முன்பு அறிமுகப்படுத்திய நெக்சஸ் 7 டேப்லெட்கள், விற்பனையில் பெரும் சாதனை படைத்தது. இதனை அடுத்து கூகுள் நிறுவனம் தற்போது, நெக்சஸ் 8-ஐ தயார் செய்து வருகின்றது. இதற்காக பிரபல திறன்பேசிகள் தயாரிப்பு நிறுவனமான ஹெச்டிசி-யுடன் கைகோர்த்துள்ளது.     

கூகுள் நிறுவனம் வெகுவிரைவில் நெக்சஸ் 8 குறித்த அறிவிப்பினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் டேப்லெட்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டு வரும் இந்த நெக்சஸ் 8 பல சிறப்பான அம்சங்களை உள்ளடக்கியுள்ளதாக ஆருடங்கள் கூறுகின்றன.

இதன் சிறப்பு அம்சங்கள் பற்றி கூறப்படுவதாவது:-

முழு எச்.டி-ல் வெளிவர இருக்கும் இந்த டேப்லட்கள் 8.9 அங்குல நீளம் கொண்டதாகவும், அதிவேக ஸ்னாப் டிராகன் கோட் கோர் செயலி (Processor) பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் இன்னும் பல புதிய தொழில்நுட்பங்களை கொண்டு பயனர்களுக்கான பல சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கூகுள் வட்டாரங்கள் கூறுகின்றன.  

ஆண்டிராய்டு 4.4.3 KitKat Changelog இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள, இந்த டேப்லேட்கள் எதிர் வரும் ஜூலை மாதம் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகின்றது.