Home நாடு தெலுக் இந்தான் இடைத்தேர்தல் – இன்று வேட்புமனுத் தாக்கல்!

தெலுக் இந்தான் இடைத்தேர்தல் – இன்று வேட்புமனுத் தாக்கல்!

500
0
SHARE
Ad

Teluk intanதெலுக் இந்தான், மே 19 – தெலு இந்தான் நாடாளுமன்ற தொகுதியில் இன்று காலை வேட்புமனுத்தாக்கல் நடைபெறவுள்ளது.

தெலுக் இந்தான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சீ லியோங் பெங் (வயது 48) புற்றுநோயால் கடந்த மே 1-ல் காலமானார்.

அதனைத் தொடர்ந்து, தெலுக் இந்தான் தொகுதியில் வரும் மே 31 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை தொடங்குகிறது.

#TamilSchoolmychoice

கெராக்கான் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ மா சியூ கியோங் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடுகின்றார். அதே நேரத்தில் ஜசெக சார்பில் கேலாங் பாத்தா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங்கின் அரசியல் செயலாளராகப் பணியாற்றும் டயானா சோப்யா (வயது 27) போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.