Home கலை உலகம் ஐஸ்வர்யா ராய் படத்திற்கு இசையமைக்கும் கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன்!

ஐஸ்வர்யா ராய் படத்திற்கு இசையமைக்கும் கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன்!

743
0
SHARE
Ad

sudha_raghanadhanசென்னை, அக்டோபர் 14 – பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் தற்போது ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்கும் திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

மறைந்த இசை மேதை கே.பி.சுந்தராம்பாளின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் எடுத்த எடுப்பிலேயே ராஜீவ் மேனனின் இம்முயற்சிக்கு கர்நாடக இசை ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இதையடுத்து படம் குறித்த எந்தத் தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதைத் தவிர்த்து வருகிறார் ராஜீவ் மேனன்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் கே.பி.சுந்தராம்பாள் பற்றிய கதைக்கு பிரபல பாடகி சுதா ரகுநாதன் இசை அமைப்பதாகக் கூறப்படுகிறது. அவரது இசையில் இரண்டு பாடல்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிகிறது.