Home கலை உலகம் தீபாவளியை முன்னிட்டு அஸ்ட்ரோவில் விறுவிறுப்பான இந்திப் படங்கள்!

தீபாவளியை முன்னிட்டு அஸ்ட்ரோவில் விறுவிறுப்பான இந்திப் படங்கள்!

706
0
SHARE
Ad

Astro bollywoodகோலாலம்பூர், அக்டோபர் 20 – தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அஸ்ட்ரோவில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பாலிவுட் ஒன் எச்டி (சேனல் 251) மற்றும் அஸ்ட்ரோ ஸீ (சேனல் 108) தொலைக்காட்சிகளில் பிரபல கதாநாயகர்கள் நடித்த விறுவிறுப்பான இந்தித் திரைப்படங்கள் ஒளிபரப்பப்படவுள்ளன.

அந்த வரிசையில்,

அக்டோபர் 22-ம் தேதி, தீபாவளி அன்று இரவு 9.30 மணிக்கு, அஸ்ட்ரோ ஸீ (சேனல் 108) தொலைக்காட்சி – அபிஷேக் பச்சன், ஹிர்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்த ‘டூம் 2’ திரைப்படம் ஒளிபரப்பப்படவுள்ளது.

#TamilSchoolmychoice

அக்டோபர் 23-ம் தேதி, இரவு 9 மணிக்கு,பாலிவுட் ஒன் எச்டி (சேனல் 251)  தொலைக்காட்சியில் –  வித்யா பாலன் நடித்த ‘போபி ஜசூஸ்’

அக்டோபர் 30-ம் தேதி, இரவு 9 மணிக்கு, பாலிவுட் ஒன் எச்டி (சேனல் 251)  தொலைக்காட்சியில் – மாதுரி டிக்சி, ஜூயி ஜவ்லா நடித்த குலாப் கேங்  ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகவுள்ளன.