அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்’ “பழம்பெரும் திரைப்பட நடிகரும், எஸ்.எஸ்.ஆர் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவருமான “லட்சிய நடிகர்” எஸ்.எஸ்.ராஜேந்திரனின் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தனது 86-வது வயதில் இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்”.
“மேடை நாடகங்கள் மூலம் திரையுலகிற்குள் நுழைந்து, முதலில் சிறு சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் “முதலாளி” என்ற திரைப்படம் தான் முகவரி பெற்றுத் தந்தது.”
“திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தடம் பதித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியவர்.”
“எஸ்.எஸ். ராஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என ஜெயலலிதா கூறியுள்ளார்.