Home நாடு ஊடுருவல்காரர் சுட்டுக் கொல்லப்பட்டார் – கிழக்கு சபா பாதுகாப்புப் படை அறிவிப்பு

ஊடுருவல்காரர் சுட்டுக் கொல்லப்பட்டார் – கிழக்கு சபா பாதுகாப்புப் படை அறிவிப்பு

586
0
SHARE
Ad

Sabah Semporna 440 x 215செம்பூர்ணா, அக்டோபர் 27 – பங்காவ் பங்காவ் கடற்பரப்பில் நுழைய முயன்ற 40 வயதைக் கடந்த ஊடுருவல்காரர் ஒருவரை போலிசார் சுட்டுக்கொன்றதாக கிழக்கு சபா பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

ஒரு படகில் இருந்த அந்த ஊடுருவல் நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.15 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்டதாக கிழக்கு சபா பாதுகாப்புப் படையின் தலைவர் (கமாண்டர்) டத்தோ அப்துல் ரஷீட் ஹாருன் தெரிவித்தார்.

இதையடுத்து கடலோர கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 30 முதல் 40 வயதுடைய 7 ஆடவர்களும் 2 பெண்களும் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும் 6 ஆடவர்கள் தேடப்பட்டு வருவதாகவும், அவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

“அதிகாலை வேளையில் ஊடுருவல் நபர் வந்த படகை ரோந்துப் பணியில் இருந்த போலிசார் கண்டனர். போலிசாரைக் கண்டதும் அப்படகு விரைவாகச் சென்றது. இதையடுத்து படகை விரட்டிச் சென்று போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ஊடுருவல் நபரும் திருப்பிச் சுட்டார். எனினும் துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டார். அந்நபரைப் பற்றிய விவரங்கள் ஏதும் தெரியவில்லை. அவர் 40 வயதைக் கடந்த நபர். செம்பூர்ணா பகுதி மக்கள் அமைதி காக்க வேண்டும். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது,” என்றார் டத்தோ அப்துல் ரஷீட்.