Home நாடு கோலாலம்பூரில் அனைத்துலக விமான நிலையம் 2

கோலாலம்பூரில் அனைத்துலக விமான நிலையம் 2

661
0
SHARE
Ad

kliaகோலாலம்பூர், பிப்.25- குறைந்த கட்டண பயணச் சேவை வழங்கும் புதிய விமான நிலையமாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2 (கே.எல்.ஐ.ஏ-2) திறப்பு விழா ஜூன் 28- தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் அதன்  கட்டுமானப்பணி  வரும் மே மாதத்திற்குள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாணிபம் அடிப்படையில் அனைத்துலக விமான நிலையம் 80 விழுக்காட்டிற்கும் அதிகமான இடங்களை உள்நாட்டு மற்றும் அனைத்துலக வர்த்தக மையங்கள் எடுத்துக் கொண்டதாக வர்த்தகச் சேவை மேலதிகாரி பைசா கைருடின் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், மற்ற விமான நிலையத்திற்கு ஈடான ஒரு சிறப்புமிக்க விமான நிலையமாகச் செயலாற்றுவதற்கு, அதில் கொண்டுவரப்படும் 80 விழுக்காடு பொருள்களைக் கையாள சிறந்தவையாக இருக்கும் எனச் சொன்னார்.

அனைத்துலக விமான நிலையம் 2, 2.4 பில்லியன் வெள்ளி கட்டணச் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய விமான நிலையம் 257,000 ஆயிரம் மீட்டர் பரப்பளவிலும், 60 கதவுகள், 8 பாதுகாப்பு நிலையங்கள், 80 பயணிக்களுக்கான பாலங்கள் ஆற்றூ 32,000 மீட்டர் பரப்பளவில் 225 கடைகளை எழுப்பக்கூடிய வசதிகள் ஆகியன உள்ளன.