Home நாடு “பதவி விலகுங்கள்” – சிலாங்கூர் அம்னோ தலைவர்களை சாடுகிறார் மகாதீர்!

“பதவி விலகுங்கள்” – சிலாங்கூர் அம்னோ தலைவர்களை சாடுகிறார் மகாதீர்!

612
0
SHARE
Ad

Tun Mahathirபெட்டாலிங் ஜெயா, நவம்பர் 5 – சிலாங்கூர் அம்னோ தலைவர்களை பதவி விலகினால் தான் அங்கு புதியவர்கள் பதவி ஏற்று அம்மாநிலத்தில் அம்னோவை வலுப்படுத்த முடியும் என முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் தனது வலைத்தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அம்னோ தலைவர்களில் ஒருவர் கூட மந்திரி பெசாராக தகுதியற்றவர்கள் என்றும் மகாதீர் கடுமையாக சாடியுள்ளார்.

கடந்த 12 வது மற்றும் 13 வது பொதுத்தேர்தல்களில் சிலாங்கூர் மாநிலத்தில் அம்னோவிற்கு ஏற்பட்ட தோல்வியை அம்மாநில அம்னோ தலைவர்கள் ஒப்புக்கொள்வதோடு, பதவியும் விலக வேண்டும் என்றும் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“நல்ல திறமையுடன் வரும் புதியவர்களை சிலாங்கூர் மாநில அம்னோ தலைவர்கள் வளர விடுவதில்லை. அவர்களால் எங்கே தங்களது பதவி பறி போய்விடுமோ என்று எண்ணி, மாநில அரசாங்கத்தை விடுத்து தங்களது பதவிகளை வலுப்படுத்துவதிலேயே குறியாய் உள்ளனர்” என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் அம்னோவில் திறமையுள்ள பல புதியவர்களை இணைக்க வேண்டும் என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிலாங்கூர் அம்னோ தலைவர்கள் கறைபடியாதவர்களாக இருக்க வேண்டும் என்றும், மக்களோடு நேரடியாக தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.