Home கலை உலகம் தனுஷுடன் நடிக்க மறுத்தார் ஹன்சிகா

தனுஷுடன் நடிக்க மறுத்தார் ஹன்சிகா

595
0
SHARE
Ad

hansiikaசென்னை, பிப். 26- தனுஷுடன் நடிக்க மறுத்தார் ஹன்சிகா. தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகமானார் ஹன்சிகா மோத்வானி.

இதையடுத்து விஜய்யுடன் வேலாயுதம் ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார்.

தற்போது சிங்கம் 2 சூர்யா, ஆர்யாவுடன் சேட்டை, கார்த்தியுடன் பிரியாணி, சிம்புவுடன் வாலு, வேட்டை மன்னன் படங்களில் நடித்து வருகிறார்.

#TamilSchoolmychoice

இதுதவிர தெலுங்கிலும் பல படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஹன்சிகாவிடம் கேட்டனர்.

அதற்கு உடனடியாக ஹன்சிகா ஒப்புதல் தரவில்லை. பின் திடீரென நடிக்க மறுத்துவிட்டார். இது பற்றி ஹன்சிகாவிடம் கேட்டபோது, தமிழில் சேட்டை, சிங்கம் 2, மற்றும் சிம்புவுடன் 2 படங்களில் நடித்து வருகிறேன். தெலுங்கிலும் நடிக்கிறேன். இந்நிலையில் தனுஷ் படத்திற்கு  நடிக்க முடியாது  என்றார்.