Home நாடு முன்னாள் ஐஜிபி முகமட் பக்ரி ஓமார் காலமானார்!

முன்னாள் ஐஜிபி முகமட் பக்ரி ஓமார் காலமானார்!

413
0
SHARE
Ad

TanSriMohdBakriகோலாலம்பூர், நவம்பர் 10 – முன்னாள் தேசிய காவல்துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ முகமட் பக்ரி ஓமார் புற்று நோய் காரணமாக தேசிய புற்றுநோய் மருத்துவக் கழகத்தில் இன்று காலை காலமானார்.

கடந்த 2003 -ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரையில் முகமட் பக்ரி பதவி வகித்தார்.

பேராக் மாநிலம் மஞ்சோங்கில் கடந்த 1948-ம் ஆண்டு, செப்டம்பர் 10-ம் தேதி பிறந்தவரான பக்ரி, 1971-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி துணை காவல்துறை கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார்.

#TamilSchoolmychoice

அதன் பின்னர் பல்வேறு மாநில பதவிகளை வகித்த பக்ரி, கடந்த 1988-ம் ஆண்டு கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத் துறையில் நியமனம் செய்யப்பட்டார்.

பின்னர், 2003-ம் ஆண்டு, பக்ரி டான்ஸ்ரீ நோரியன் மாய்க்குப் பதிலாக தேசிய காவல்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பக்ரியின் இறுதிச்சடங்குகள் இன்று மாலை மவுன்ட் கியாரா இஸ்லாமிய மயானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.