Home உலகம் ஜப்பானுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் – சீனா!

ஜப்பானுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் – சீனா!

450
0
SHARE
Ad

shinzoabe-xi_jinpingபெய்ஜிங், நவம்பர் 10 – சீனா மற்றும் ஜப்பான் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் கிழக்கு சீனக் கடல் எல்லை பிரச்சனையில் சுமூகத் தீர்வு ஏற்பட ஜப்பானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

எனினும், அதற்கான சூழலை ஜப்பான் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. சீனா மற்றும் ஜப்பான் இடையே நல்லுறவு பாதிப்படைய முக்கிய காரணமாக இருப்பது கிழக்கு சீனக் கடல் அருகே உள்ள குறிப்பிட்ட தீவுப் பகுதி ஆகும்.

இரு நாடுகளும் அந்த தீவினை தங்களுக்கு சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், அதனை பாதுகாக்க அவ்வப்போது இரு நாடுகளும் அங்கு ஆக்கிரமிப்புகளை செய்து வருகின்றன.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கூறுகையில், “பெய்ஜிங்கில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புக் கூட்டம் விரைவில் தொடங்க உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பெய்ஜிங் வரவுள்ளார். அப்போது அவருடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்துப் பேசுவார்.”

“இந்த பேச்சுவார்த்தைக் கூட்டத்தினை நல்ல முறையில் நடத்த ஜப்பான் ஒத்துழைப்பு தர வேண்டும். அப்போது எடுக்கப்படும் முடிவுகளை இரு நாடுகளும் மதித்து நடைமுறைப்படுத்தினால் உறவுகள் மேம்பட வாய்ப்புகள் உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஜப்பானின் கோரிக்கைக்கு நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.