இஸ்லாமாபாத், பிப்.26- பாகிஸ்தானில், மின் தொகுப்பில் ஏற்பட்ட கோளாறால், அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின.
பாகிஸ்தானில், மூன்று ஆண்டுகளாக, கடும் மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாக, பல மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது.
இதற்கிடையே, பலுசிஸ்தானில் உள்ள மின்தொகுப்பில், நேற்று முன்தினம் ஏற்பட்ட கோளாறால், பாகிஸ்தானின், நான்கு மாகாணங்களும் இருளில் மூழ்கின.
பலுசிஸ்தானில் உள்ள, தனியார் மின் நிறுவனம் செய்த தவறால், இந்த கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து விசாரிக்க, நான்கு பேர் கொண்ட குழு, அமைக்கப்பட்டுள்ளது.
பல மணி நேர மின்வெட்டால், இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி ஆகிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. படிப்படியாக, நிலைமை சரி செய்யப்பட்டு வருகிறது.
பிரதமர் பர்வேஸ் பாகிஸ்தான் அஷ்ரப், இதுகுறித்து, தீவிரமாக கண்காணித்து வருகிறார்.