வாஷிங்டன், பிப்.26- அமெரிக்காவில், ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அமைக்கப்படும் நூலகத்துக்கு, ஒரு செல்வந்தர், 50 ஆயிரம் மில்லியன் டாலர் நன்கொடை வழங்கியுள்ளார்.
அமெரிக்காவின், முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டனின், 281வது பிறந்த நாள், இம்மாதம், 22ம் தேதி கொண்டாடப்பட்டது.
அவர் நினைவாக நூலகம் ஒன்றை அமைக்க, விர்ஜீனியா மாகாணத்தின், மவுன்ட் வெர்னான் நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
வாஷிங்டன் எழுதிய நூல்களும், தொகுப்புகளும், இந்நூலகத்தில் இடம்பெறும். ஆய்வு மாணவர்கள் பயனடையும் வகையில் கட்டப்பட்டு வரும் இந்நூலகம், வரும் செப்., 27ம் தேதி திறக்கப்படும்.
இந்நிலையில், அமெரிக்காவின் செல்வந்தர், டேவிட் ரூபீன்ஸ்டீன் அந்நூலகத்துக்கு, 5050 ஆயிரம் மில்லியன் டாலர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இவர் கடந்த, 2012ல், வாஷிங்டன் நினைவிடத்தை புதுப்பிக்க, 40 ஆயிரம் மில்லியன் டாலர் நன்கொடை அளித்தவர். மேலும், உலக மக்களின் நன்மைக்காக, சொத்தில் பாதியை நன்கொடையாக வழங்கும், “கிவிங் பிளெட்ஜ்’ அமைப்பில், உறுப்பினராகவும் உள்ளார்.