Home நிகழ்வுகள் சுபாங் பெர்டானாவில் நெடுந்தூர ஓட்டப் போட்டி

சுபாங் பெர்டானாவில் நெடுந்தூர ஓட்டப் போட்டி

618
0
SHARE
Ad

dato-kumaresannசுபாங், பிப்.26, எதிர்வரும்  3.3.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு சுபாங், தாமான் சுபாங் பெர்டானா கால்பந்து மைதானத்தில் 5 கி.மீ/ 3 கி.மீ நெடுந்தூர ஓட்டப்பந்தயம் நடைபெறவுள்ளது.

எட்டு பிரிவுகளாக நடைபெறவுள்ள இந்த போட்டியில் ஆண், பெண், பொது, 45 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண், 13 வயது முதல் 17 வயது வரையிலான ஆண், பெண், 12 வயத்துக்கு கீழ்பட்டவர்கள் கலந்துக் கொள்ளலாம்.

இப்போட்டிக்கு சிறப்பு வருகையளராக கோத்தா டாமான்சாரா தொகுதி தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் டத்தோ மெகாட் பிர்டோர்ஸ், சுபாங் மஇகா நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் ராவ், மஇகா தேசிய பொதுச் செயலாளர் டத்தோ எஸ். முருகேசன், மஇகா சுபாங் தொகுதி காங்கிராஸ்  தலைவர் என். ஆர்.கிருஷ்ணன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

#TamilSchoolmychoice

சுற்று வட்டார மக்கள் திரளாக வருகை தந்து  போட்டி நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள  ஏற்பாட்டுக்குழுவின் சார்பாக கிளப் சுக்கான் கொம்யூனிட்டி தலைவர் து.காந்திதாசன் கேட்டுக்கொள்கிறார்.

போட்டியில் பங்கெடுத்துக்கொள்ளும் அனைவருக்கும் காலைச் சிற்றுண்டி வழங்கப்படும்.

மேல் விவரங்களுக்கு காந்திதாசனுடன் 019-2679991 அல்லது ம.ஆறுமுகத்துடன் 017-8811440 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.