3-1ஏ, முதல் மாடி, ஜாலான் பண்டார் 3, பூசாட் பண்டார் பூச்சோங், தெஸ்கோ அருகில் தமிழியல் வகுப்பு தொடங்குகிறது.
நாடு தழுவிய நிலையில் நடத்தப்படும் இந்த இளங்கலை தமிழியல் வகுப்புகளில் எஸ்.பி.எம், எஸ்.டிபி.எம் மாணவர்கள், பல்கலைகழக மாணவர்கள், தமிழாசிரியர்கள், தமிழில் புலமையும் ஆர்வமும் உள்ளவர்கள் வயது கட்டுப்பாடின்றி இப்பட்டக் கல்வியினை மேற்கொள்ளலாம்.
இவர்களன்றி பத்திரிகைகளில் புதிதாகச் சேர்ந்து பணியாற்றுகின்றவர்களும் இத்தேர்வு திட்டத்தில் பங்கு கொள்ளலாம்.
தமிழ் இலக்கியக் கழகம் இதுகாறும் 8 பட்டமளிப்பு விழாக்களை நடத்தியுள்ளது.
இப்பட்டக்கல்வி தொடக்கநிலை, இடைநிலை, நிறைநிலை என மூன்றாண்டு கல்வியாகும்.
ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தேர்வு நடைபெறும். இரண்டாண்டிற்கு ஒருமுறை பட்டமளிப்பு விழாவும் நடைபெறும்
இவ்வரிய வாய்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ் ஆர்வலர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேல் விவரங்களுக்கு பூச்சோங் மையத் தலைவர் அ.குப்புசாமி 012-2135187, மா.கருப்பண்ணன் 017-6767180, அ.இராமன் 012-2041824 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.