Home கலை உலகம் ‘தூய்மை இந்தியா’ திட்டத்திற்காக பாடல் எழுதும் வைரமுத்து!

‘தூய்மை இந்தியா’ திட்டத்திற்காக பாடல் எழுதும் வைரமுத்து!

1417
0
SHARE
Ad

vairamuthu-vanathi-srinivasசென்னை, டிசம்பர் 2 – பிரதமர் மோடியின் கனவு திட்டமான ‘தூய்மை இந்தியா’ திட்டத்திற்காக பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து விழிப்புணர்வு பாடல் எழுத இருக்கிறார்.

இந்த தகவலை பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  கவிப்பேரரசு வைரமுத்துவை திங்கள்கிழமை வானதி சீனிவாசன் சந்திது பேசினார்.

அப்போது அவர், தமிழுக்காக குரல் கொடுத்துவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்க்கு பாராட்டு விழா நடத்தியதற்காகவும்,  அவரின் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து வருவதற்காகவும் நன்றி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பிரதமர் நரேந்திர மோடியின் “தூய்மை இந்தியா’ திட்டத்தை வைரமுத்து வரவேற்றதாக வானதி சீனிவாசன் கூறியுள்ளார். அந்தத் திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு தான் விடுத்த வேண்டுகோளை வைரமுத்து ஏற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வைரமுத்து எழுதும் பாடல் நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். திமுக ஆதரவாளரான வைரமுத்து சமீபத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்க்கு பாராட்டுவிழா நடத்தினார்.

இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக திட்டம் ஒன்றிர்க்கு பாடல் எழுத உள்ளார். தூய்மை இந்தியா திட்டத்திற்காக நடிகர்கள் துடைப்பம் எடுத்தால் வைரமுத்து தன் பேனாவினால் தூய்மை இந்தியாவிற்காக விழிப்புணர்வு பாடல் எழுத உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.