ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று தமது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி ஜனாதிபதி மாளிகையில் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து பிரதமர் மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும் தமது ட்விட்டர் பக்கத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது;
“பிரணாப் முகர்ஜியின் அரசியல் அனுபவத்தோடும் அவரது தகுதியோடும் ஒரு சிலரை மட்டுமே ஒப்பிட முடியும். நமது நாட்டின் ஜனாதிபதியாக பிரணாப் கிடைத்தது நாம் அனைவருக்கும் கிடைத்த மிகப் பெரிய கவுரவம்” என பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.