Home கலை உலகம் மலேசியாவில் “நாதஸ்வரம்” படப்பிடிப்பு

மலேசியாவில் “நாதஸ்வரம்” படப்பிடிப்பு

802
0
SHARE
Ad

nathasvaramகோலாலம்பூர், பிப்.27- சின்னத்திரை மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால், நாதஸ்வரம் தொடரும் தற்போது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கண்டு வருகிறது.

இந்த நாதஸ்வரம்  சின்னத்திரை தொடரின் சில காட்சிகள் தற்போது மலேசியாவில் படமாக்கப்பட்டு வருகின்றன.

இயக்குநர் திருமுருகன், இயக்குநர் மெளலி, மீனாட்சி ராஜ்கான் நடித்த  காட்சிகள் கோலாலம்பூரிலும் பத்துமலை வளாகத்திலும்  படமாக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இத்தொடரில் ‘லோட்டஸ் ஃபைவ் ஸ்டார்’ உரிமையாளர் டத்தோ ரெனா துரைசிங்கமும் சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.

“தமிழ் சினிமாவில் முழுக்க முழுக்க வெளிப்புற படப்பிடிப்பு நடத்தப்பட்ட படம் என்ற பெருமை ’16 வயதினிலே’ படத்திற்கு எப்படி இருக்கிறதோ, அதுமாதிரி ‘நாதஸ்வரம்’ தொடருக்கும் பெருமை இருக்கு. முதல் முறையாக முழுக்க முழுக்க வெளிப்புற படப்பிடிப்பு நடக்கும் தொடர் நாதஸ்வரம்தான் ”என்று  நாதஸ்வர இயக்குநர் திருமுருகன் கூறியுள்ளார்.

நாதஸ்வர தொடரின் படப்பிடிப்பு மலேசியாவில் சுமார் ஒரு வார காலம் நடைபெறும் என்று அவர் மேலும் கூறினார்.