Home வணிகம்/தொழில் நுட்பம் மலிண்டோ ஏர் விமானச் சேவை தொடங்குகிறது

மலிண்டோ ஏர் விமானச் சேவை தொடங்குகிறது

762
0
SHARE
Ad

malindoகோலாலம்பூர், பிப்.27- மலேசியாவை தளமாகக் கொண்டு செயல்படவிருக்கும் புதிய வரவு செலவு (பட்ஜெட்) விமான நிறுவனமான மலிண்டோ ஏர், அடுத்த மாத இறுதியில் தமது விமானச் சேவையை தொடங்குகிறது.

இவ்விமானச் சேவை தொடங்குவதை முன்னிட்டு இப்பொழுதே, அனுமதி சீட்டு (டிக்கெட்) விற்பனை ஆரம்பமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசிய அரசாங்கத்திடம் விமான போக்குவரத்தை நடத்துவதற்கான உரிமம் பெறப்பட்டுள்ளதால், அதனுடைய சேவையை மலேசியாவில் தொடர்வதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

எதிர்வரும் மார்ச் மாதம் இறுதியில் அதிகாரப்பூர்வமாக தனது சேவை தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.