Home வணிகம்/தொழில் நுட்பம் மலிண்டோ ஏரின் 50,000 இலவச இருக்கைகள்!

மலிண்டோ ஏரின் 50,000 இலவச இருக்கைகள்!

677
0
SHARE
Ad

B739 9M-LNF MALINDO AIRகோலாலம்பூர், பிப் 18 – இவ்வருட சுற்றுலா ஆண்டை முன்னிட்டு பிரபல விமான சேவை நிறுவனமான மலிண்டோ ஏர், சுமார் 50 ஆயிரம் இலவச இருக்கைகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

இன்று தொடங்கி வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி வரை, வாடிக்கையாளர்கள் இந்த இலவச இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

விமான நிலைய வரி மற்றும் இதர வரிகளை எல்லாவற்றுக்கும் சேர்த்து 39 வெள்ளியை மட்டும் வாடிக்கையாளர்கள் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி சந்திரன் ராமமூர்த்தி கூறுகையில், 2014 ஆம் ஆண்டை பிரபலப்படுத்தும் நோக்கில் நாங்கள் இந்த சேவையை வழங்கியுள்ளோம். பள்ளி விடுமுறை, பொதுவிடுமுறை காலங்களில் இந்த இலவச சேவையை பெற முடியாது. இந்த இருக்கைகளை பயன்படுத்தி இன்று தொடங்கி மே 27 ஆம் தேதி வரை மலிண்டோ ஏர் சேவை மேற்கொள்ளும் அனைத்து இடங்களுக்கும் செல்லலாம்” என்று தெரிவித்தார்.

மலிண்டோ ஏரின் இந்த  50 ஆயிரம் இலவச் இருக்கைகள் குறித்த மேல் விபரங்களுக்கு www.malindoair.com எனும் அகப்பத்தை வலம் வரலாம் என்றும் சந்திரன் ராமமூர்த்தி தெரிவித்தார்.