கோலாலம்பூர்,பிப் 18 – ம.இ.கா உயர்மட்டத் தேர்தலில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவு அலுவலகம் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளது.
நேற்று நடைபெற்ற விசாரணையில் நான்கு தலைவர்களிடம், ஆர்.ஓ.எஸ் அதிகாரிகள் விசாரணை செய்தனர். புத்ராஜெயாவிலிருந்து வந்த ஆர்.ஓ.எஸ் அதிகாரிகள், சிலாங்கூர் ஆர்.ஓ.எஸ் அலுவலகத்தில் இந்த விசாரணையை நடத்தியதாகக் கட்சிக்கு நெருங்கிய வட்டாரம் ஒன்று தெரிவித்தது.
இந்த தேர்தல் முறைகேடு விவகாரத்தை ஆராய்வதில் ஆர்.ஓ.எஸ் அலுவகம் தீவிரமாக இருப்பதாக அந்த வட்டாரம் தெரிவித்தது. போட்டியிட்டவர்கள் ஆர்.ஓ.எஸ் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ள புகார்கள் மற்றும் ஆதாரங்கள் மிக வலுவாக உள்ளன எனவும் கூறப்படுகின்றது.
உதவித் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட்டவர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கையில் முரண்பாடுகளும் மற்றும் பல்வேறு குளறுபடிகளும் இருந்ததை தேர்தலில் போட்டியிட்டவர்கள் கடுமையாக ஆட்சேபித்துள்ளனர்.