Home உலகம் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன்!

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன்!

575
0
SHARE
Ad

terroristராவல்பிண்டி, டிசம்பர் 19 – இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில், கடந்த 2008-ம் ஆண்டு தொடர் தாக்குதல் நடத்திய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ஜாகி-உர் ரஹ்மான் லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் அளித்து தீர்ப்பளித்துள்ளது.

இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கு கடல் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி மும்பையில் உள்ள முக்கிய இடங்களில் தொடர் தாக்குதல் நடத்தினர்.

8 இடங்களில் நடந்த இந்த தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்ட நிலையில், பிடிபட்ட ஒரே தீவிரவாதியான அஜ்மல் கசாபிடம் இந்திய அரசு தீவிர விசாரணை நடத்தியது. அப்போது, பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளுக்கு இதில் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இதில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜாகி-உர் ரஹ்மான் லக்வி, பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.