Home நாடு நேற்றைய மத்திய செயலவைக் கூட்டத்தில் டத்தோ சரவணன் கலந்து கொள்ளவில்லை!

நேற்றைய மத்திய செயலவைக் கூட்டத்தில் டத்தோ சரவணன் கலந்து கொள்ளவில்லை!

599
0
SHARE
Ad

m.saravanan1-may7கோலாலம்பூர், டிசம்பர் 19 – நேற்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மஇகாவின் சர்ச்சைக்குரிய மத்திய செயலவைக் கூட்டத்தில் மஇகாவின் உதவித் தலைவர்களில் ஒருவரும், விளையாட்டுத் துறை துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன் கலந்து கொள்ளவில்லை.

முன்கூட்டியே திட்டமிட்டபடி, கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதற்கொண்டு அவர் அதிகாரபூர்வ விடுமுறையில் இருக்கின்றார் என்றும், குடும்பத்தினருடன் வெளிநாட்டில் இருப்பதால், அவரால் திடீரெனக் கூட்டப்பட்ட மத்திய செயலவைக் கூட்டத்தில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.