Home பொது போலிடெக்னிக் கல்லூரிகளில் இந்தியர்களுக்கு 1,600 இடங்கள்

போலிடெக்னிக் கல்லூரிகளில் இந்தியர்களுக்கு 1,600 இடங்கள்

784
0
SHARE
Ad

murugesanகோலாலம்பூர், பிப்.27- அண்மையில் போர்ட்டிக்சனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இந்திய மாணவர்களுக்காக தொழில் நுட்பக்  கல்லூரிகளில் (போலிடெக்னிக்) முதல் கட்டமாக 1,600 இடங்கள் ஒதுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் அறிவித்தார்.

இதனை மஇகா வரவேற்கிறது என்று மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் (படம்) செய்தியாளர்களிடம் கூறினார்.

இதுவொரு நல்ல திட்டம் என்று கூறிய அவர், தேர்ச்சி பெற்ற மாணவர்களின் நலன்களை மட்டும் கவனத்தில் கொள்ளாது, தேர்ச்சி பெறாத ஏனைய மாணவர்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு அரசு வழங்கியுள்ள இந்த வாய்ப்பு வரவேற்கத்தகதாகும்.

#TamilSchoolmychoice

இம்மாணவர்கள் தொழில்திறன் கல்விகளில் சிறந்த தேர்ச்சி பெற்றால், சிறந்ததொரு வாழ்க்கை தரத்தை பெறுவதற்குரிய வாய்ப்பைப் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.

இக்கல்லூரிகளில் சேர்ந்து பயில்வதற்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் இந்த வாய்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று டத்தோ எஸ்.முருகேசன் செய்தியாளர்களிடம் கூறினார்.