யாழ்பாணம், ஜனவரி 3 – இலங்கையில் வருகிற 8–ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில், தற்போதைய அதிபர் ராஜபக்சே 3–வது முறையாக போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மைத்ரிபாலா சிறீசேனா களம் இறங்கியுள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இலங்கையில் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராஜபக்சே பேசினார். அப்போது அவர் பேசியதை ஒருவர் தமிழில் மொழி பெயர்த்தார்.
இந்த நாட்டின் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 11 முறை நான் இங்கு வந்துள்ளேன். ஆனால், எதிர்க்கட்சி வேட்பாளர் எப்போதோ ஒரு முறை வந்துப் போகின்றவர். உங்களுக்கெல்லாம் நாங்கள் மின்சாரம் அளித்துள்ளோம்.
புதிய பள்ளிகளை கட்டித் தந்துள்ளோம். முறையான குழாய் இணைப்புகளை ஏற்படுத்தி தரவுள்ளோம். உங்களுக்கு இதையெல்லாம் செய்து தந்த எனக்கு இந்த தேர்தலில் வாக்களியுங்கள் என்று கெஞ்சினார் ராஜபக்சே.