Home வாழ் நலம் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் ஊறுகாய்!

உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் ஊறுகாய்!

562
0
SHARE
Ad

23-garlic-pickleஜனவரி 14 – ஊறுகாயில் பல வகைகள் உள்ளன. மேலும் ஊறுகாய் எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். இதற்கு காரணம் அதில் சேர்க்கப்பட்டுள்ள பதப்படுத்தும் பொருட்கள் தான்.

என்ன தான் ஊறுகாயை தினமும் கொஞ்சமாக எடுத்துக் கொண்டாலும், அது கொஞ்சம் கொஞ்சமாக உயிரை கொல்லும். ஊறுகாயை அன்றாடம் எடுத்து வந்தால், என்ன பிரச்சனைகள் வரும் என்பதை பார்க்கலாம்.

ஊறுகாயில் பதப்படுத்தும் பொருளான சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பதால், நீரிழிவு இருப்பவர்கள், ஊறுகாயை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான நிலைமைக்கு உள்ளாகக்கூடும்.

#TamilSchoolmychoice

ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், அவை இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் எனும் அமில அளவை அதிகரித்து, இதய நோய்க்கு வழிவகுக்கும். எனவே இதயம் சம்பந்தமான நோய்கள் இருப்பவர்கள் ஊறுகாயை தவிர்ப்பது நல்லது.

pickleஇரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்க்க வேண்டும். இதனால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரிப்பது தடுக்கப்படுவதோடு, அதனால் இதய நோய் வருவதையும் தவிர்க்கலாம்.

ஏனெனில் ஊறுகாயை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதில் அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கும்.

ஊறுகாயில் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதிக அளவிலான உப்பு சேர்க்கப்பட்டிருப்பதால், அவற்றை அன்றாடம் எடுத்து வரும் போது, அவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும்.

picklesஇதனால் வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வை உணரக்கூடும்.  மேலும் உப்பு சம்பந்தமான நோய் வரவும் அதிக வாய்ப்புள்ளது.

என்ன தான் ஊறுகாய் உணவின் சுவையை அதிகரித்தாலும், இவற்றை அன்றாடம் உணவில் சேர்ப்பது நல்லதல்ல. அதற்காக ஊறுகாயை சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. அன்றாடம் சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் ஊறுகாயை செய்து சாப்பிடுங்கள்.