Home நாடு மலேசியாவின் பொருளாதார நிலை குறித்து முழு அறிக்கை – பிரதமர் வெளியிடுகிறார்

மலேசியாவின் பொருளாதார நிலை குறித்து முழு அறிக்கை – பிரதமர் வெளியிடுகிறார்

567
0
SHARE
Ad
Najib Tun Razak

கோலாலம்பூர், ஜனவரி 14 – மலேசியாவின் தற்போதைய பொருளாதார நிலை குறித்த முழுமையான ஓர் அறிக்கையை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அடுத்த வாரம் வெளியிட உள்ளார். செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இத்தகவலை வெளியிட்டார்.

நாட்டின் பொருளாதார நிலை மற்றும் வரவு – செலவு அறிக்கை (பட்ஜெட்) மற்றும் உலகச்சந்தையில் எண்ணெய் விலை சரிவு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், “அடுத்த வாரம் இவை தொடர்பில் அறிக்கை வெளியிட உள்ளேன்,” என்றார் பிரதமர் நஜிப்.

மலேசியாவுக்கான சீன நாட்டுத் தூதரிடம் இருந்து வெள்ள நிவாரண உதவியைப் பெற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், கிழக்கு கரையோரப் பகுதிகளில் நிலவும் வெள்ளப் பேரிடர் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

#TamilSchoolmychoice

மொத்தம் 2950 கூடாரங்கள் (டென்ட் கொட்டைகள்) அமைப்பதற்கான பொருட்கள், 220 ஜெனரேட்டர்கள், 400 நீர் இறைக்கும் பம்புகள், 60 தண்ணீர் சுத்தகரிப்பு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ முகைதீன் யாசின், தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி ஆகியோரும் பங்கேற்றனர்.