புதுடில்லி, ஜனவரி 19 – இந்தியாவின் தலைநகர் டில்லியிலுள்ள அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று இரவு பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டது.
நெதர்லாந்தை சேர்ந்த கேஎல்எம் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் டில்லி விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த போது ஓடுபாதையில் வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த வாகனத்தில் ‘ரேடியா சேட்’ சரியாக வேலை செய்யவில்லை என்ற காரணத்தால், அந்த ஓட்டுநரை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளால் தொடர்பு கொள்ள முடியாமல் போனதாக கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விமானத்தை சற்று நேரம் கழித்து தரையிறக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இதனால் பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டது.