Home உலகம் புதியதாக உருவாகிறது டைட்டானிக் 2

புதியதாக உருவாகிறது டைட்டானிக் 2

602
0
SHARE
Ad
titanicநியூயார்க், பிப்.28-டைட்டானிக் கப்பலை யாராலும் மறக்க முடியாது. கடலில் மூழ்கி 100 ஆண்டுகள் கடந்து விட்டது.
இந்த கப்பலைப் போலவே புதிய கப்பலை உருவாக்க முடிவு செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுரங்கத் தொழில் அதிபர் கிளைவ் பால்மெர் திட்டமிட்டுள்ளார்.
அதற்காக, டைட்டானிக்-2 கப்பலின் மாதிரி வடிவமைப்பை நியூயார்க்கில் அவர் வெளியிட்டார். சீனாவில் தயாராக உள்ள டைட்டானிக்-2 கப்பல் வரும் 2016ம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் பயணத்தை தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் போல அமைந்துள்ள இந்த புதிய கப்பலில், பாதுகாப்பு அம்சங்களில் நவீனமும், சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் வசதிகளும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.