Home வணிகம்/தொழில் நுட்பம் வெ.8961 மில்லியன் வருமானம்- மெக்சிஸ் சாதனை

வெ.8961 மில்லியன் வருமானம்- மெக்சிஸ் சாதனை

809
0
SHARE
Ad

mexisகோலாலம்பூர், பிப்.28- கடந்த 2012ஆம் ஆண்டிற்கான மொத்த வருமானமாக  வெ. 8,961 மில்லியன் பெற்று  மெக்சிஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

2011 ஆம் ஆண்டிற்கான மொத்த வருமானம் வெ. 8,800 மில்லியனாகும். 2011 ஆம் ஆண்டைக் காட்டிலும்  1.9 சதவீதம் வருமானத்தில் அந்நிறுவனம் வளர்ச்சி அடைந்துள்ளது.

இதனைக் குறித்து மெக்சிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சண்டிப் தாஸ் கூறுகையில் “டிஜிட்டல் எதிர்காலத்தை நோக்கி முதலீடு  செய்யும் 2012ஆம் ஆண்டு, வருமானத்தில் சம நிலையான வருடம் என்றே கூறவேண்டும். 2013 ஆண்டைப் பொறுத்த வரையில், மெக்சிஸ் நிறுவனத்தின் வளர்ச்சியை ஏற்றம் செய்வதோடு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிறைய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ளோம்” என்று  அவர் கூறினார்.