Home வாழ் நலம் கொழுப்பை குறைத்து ஆயுளை நீடிக்கும் காபி!

கொழுப்பை குறைத்து ஆயுளை நீடிக்கும் காபி!

1003
0
SHARE
Ad

shutterstock_111999368ஜனவரி 29 – காலையில் எழுந்தவுடன் எது இருக்கிறதோ இல்லையோ, நம்மில் பலருக்கு காபி இருந்தாக வேண்டும். காபிக்கு அடிமையாகி இருப்பவர்கள் நிறையப்பேர். காபி குடித்தால் மட்டுமே அவர்களால் அவர்களின் வேலையை ஒழுங்காக செய்ய முடியும்.

இதையெல்லாம் மீறி காபியில் உள்ள உடல்நல பயன்களைப் பற்றி நீங்கள் அறிவீர்களா?. காபி என்பது நம் உடலுக்கு ஆரோக்கியமற்றது என நம் முன்னோர்கள் நம்மிடம் கூறியிருப்பார்கள்.

ஆனால் அதனைப் பற்றி சற்று ஆழமாக பார்க்கையில், அது பொய் என்பது உங்களுக்கு தெரிய வரும்.  உண்மையை சொல்லப்போனால் காபியில் சில உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. ஆனால் அதை அளவாக தான் குடிக்க வேண்டும் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்.

#TamilSchoolmychoice

சில குறிப்பிட்ட நோய்கள் ஏற்படும் இடர்பாட்டை இது பெருமளவில் குறைக்கும். இப்போது காபி நமக்கு அளித்திடும் உடல்நல பயன்களைப் பற்றி நாம் பார்ப்போம்.

காபியை பற்றி நடத்தப்பட்ட பல ஆய்வுகளும் சுவாரசியமான கண்டுபிடிப்புகளை மேற்கொண்டுள்ளது. இந்த தகவல்களை தெரிந்து கொள்வது நல்லது என்றாலும் கூட, அதன் மீது ஒட்டுமொத்தமாக சார்ந்திருப்பது தவறு.

coffee_malaysiaஅதனால் உடல் ஆரோக்கியத்தை பெனிட வேண்டும் என்றால் தினமும் ஒரு கப் அல்லது அதற்கும் குறைவான அளவில் காபி குடியுங்கள். மனநிலை, நினைவாற்றல், எச்சரிக்கை தன்மை மற்றும் எதிர்வினை நேரம் போன்ற சில மூளையின் செயல்பாடுகளை காபி மேம்படுத்தும்.

அதனால் தான் உஷார் நிலையில் இருக்க வேண்டிய சில வேலைகளை பார்க்கும் போது காபி குடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

சோர்வான உங்கள் உணர்ச்சியை சில நேரத்திற்கு மறக்கடிக்க செய்யும் காபி. உங்கள் கல்லீரலைப் பாதுகாக்கவும் காபி பயன்படுகிறது என சில ஆய்வுகள் கூறுகிறது.

காபி உங்களை ஊக்குவிப்பதால், மன அழுத்தத்தை எதிர்த்து சிறப்பாக போராடும். காபியால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும். உங்கள் உடல் எடையை குறைக்க காபி உதவும் என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா?

சொல்லப்போனால், கொழுப்பை எரிக்கும் பொருட்களை தயாரிப்பவர்கள் அதில் காப்ஃபைன் பயன்படுத்துவதற்கான காரணமே இது தான். காப்ஃபைன் உங்கள் கொழுப்பை துரிதப்படுத்த உதவும். இதனால் கொழுப்பு வேகமாக குறையும்.

Coffeeஅதற்காக அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் மெலிந்து விடலாம் என்றில்லை. காப்ஃபைன் உட்கொள்ளும் அளவை எப்போதுமே குறைவாக வைத்துக் கொள்ளுங்கள்.

சில வாழ்வு முறை நிலைகளை பொறுத்து, காபி உங்கள் ஆயுளை நீடிக்க உதவும் என நம்பகத்தன்மையுள்ள சில ஆய்வுகள் கூறியுள்ளது.

புற்றுநோய்க்கான இடர்பாட்டையும் காபி குறைக்கும். காபியால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும். காபியில் பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது என்ற தகவல் நம்மில் பலருக்கும் தெரியாது.

அதில் பொட்டாசியம், மாங்கனீஸ், பாண்டோதெனிக் அமிலம், நையாசின், மக்னீசியம் மற்றும் ரைபோஃப்ளேவின் அடங்கியுள்ளது. காபியால் கிடைக்கும் ஊட்டச்சத்து பயன்களில் இதுவும் ஒன்றாகும்.