Home உலகம் ஒபாமாவின் தலையை வெட்டுவோம் – ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல் (காணொளி உள்ளே)

ஒபாமாவின் தலையை வெட்டுவோம் – ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல் (காணொளி உள்ளே)

580
0
SHARE
Ad

video-undefinedஈராக், ஜனவரி 29 – அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தலையை வெட்டி அமெரிக்காவை இஸ்லாமிய தேசமாக மாற்றுவோம் என்று ஐ.எஸ் தீவிரவாதிகள்  காணொளி மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.

அரபிக் நாடுகளில் இயங்கிவரும் மெம்ரி என்ற தொலைக்காட்சியில் இது தொடர்பான காணொளி ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதில், குர்தீஷ் படையை சேர்ந்த வீரர் ஒருவரின் தலையை துண்டித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்,

”இஸ்லாமை எதிர்க்கும் நபர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இதுதான் விதி. ஒபாமாவே  நாங்கள் அமெரிக்கா வந்து வெள்ளை மாளிகைக்குள் உங்கள் தலையை துண்டிப்போம். அமெரிக்காவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம்”  என்று அதில்  காணொளியில் கூறுகின்றானர்.

#TamilSchoolmychoice

மேலும், ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை முன்னின்று நடத்திவரும்  ஈராக் குர்தீஷ் தலைவர் மசூவுத் பராசானியை எச்சரித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்,

ஒவ்வொரு முறையும் நீங்கள் ஏவுகணையை ஏவும் போது, உங்கள் படைவீரர்களின் தலையை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம் என்றும் அதில் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் உள்ள கோபேன் நகரில் இருந்து ஐ.எஸ் தீவிரவாதிகளை குர்தீஷ் படையினர் விரட்டியடித்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் இந்த மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://youtu.be/MqQi2m5Hb0c